சென்னை: சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும் என சிஏஏ குறித்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக பேசினார்.
சென்னையில் நடந்த 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசியதாவது: வாழக்கை நதி மாதிரி; நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். என்ன நடந்தாலும் கடமையை செய்து கொண்டே போய் கொண்டிருக்க வேண்டும். இளைய தளபதியாக இருந்த போது, 'ரெய்டு' இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது. உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரம் ஊமையாக இருக்க வேண்டும்.
மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும்: சிஏஏ குறித்து விஜய் பேச்சு