தமிழக பா.ஜ.,வினர் ஏற்கனவே சட்டசபையில் இடம்பெற்றுள்ளனர். வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்க பாடுபடுவேன். எம்.பி.,க்கள் பதவி வகித்தும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களின் வழியில் நானும் பயணிக்கிறேன். தமிழக பா.ஜ.,வில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கூட்டுக்குழு எடுக்கும் முடிவு தான். நாங்கள் சிறப்பாக பணிபுரிகிறோம். அதில் தொய்வு இல்லை. எங்களின் பணியை இன்னும் வேகப்படுத்துவோம். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து செல்வது தான் பா.ஜ.,வின் கொள்கை, அனைத்து தரப்பு மக்களிடமும் பா.ஜ.,வை கொண்டு போய் சேர்ப்போம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது தான் எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.