கோவை: ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வது தான் பா.ஜ.,வின் கொள்கை என அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., தலைவராக பதவியேற்ற பின்னர் முருகன், முதல்முறையாக கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் முருகன் கூறியதாவது :
கோவையில் ஹிந்து அமைப்புகளை சேர்ந்த ஆனந்த், சூர்ய பிரகாஷ் ஆகியோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனந்த் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூர்யபிரகாஷ் வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாதிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். கோவையில், இது போன்று தாக்குதல்கள் தொடர்வதாலும், அமைதி நிலவ வேண்டியும் போலீசார், தயவு தாட்சணியமின்றி உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும்.
ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது பா.ஜ.,: முருகன்