லக்னோ: உத்தர பிரதேசத்தில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு இப்போதே குறிவைத்துள்ள சமாஜ்வாதி கட்சி, அதற்காக ஒவ்வொரு மாதமும் 22ம் தேதி, 22 பிரச்னைகளுக்கு போராட திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 2022ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக சமாஜ்வாதி கட்சி, இப்போது இருந்தே பிரசாரப் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து முடிவெடுக்க அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் கூடியது. கூட்டத்தில், ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் 22ம் தேதி 22 மக்கள் பிரச்னைகள் குறித்து போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் '22' திட்டம்: உ.பி., தேர்தலுக்கு குறி